karththarukkae payanthae

கர்த்தருக்கே பயந்தே நடந்தால்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தருக்கே பயந்தே நடந்தால்
நன்மையும் கிருபையும் உண்டாகுமே
உந்தன் கையின் பிரயாசம் யாவும்
உந்தன் நிலத்தின் கனியும் ஆசீர்வதிப்பார்
உந்தன் மனைவி கனி தரும் திராட்சை
உந்தன் பிள்ளைகள் ஒலிவ கன்றுகள்
நன்மையும் கிருபையும் உண்டாகுமே
கர்த்தர் பயம் உனக்கு இருந்தால்
அவர் காலமெல்லாம் உன்னை ஆசீர்வதிப்பார்
சீயோனிலிருந்து உம் ஜீவனை காப்பார்
நித்தம் எருசலேம் வாழ்வை நீ காண்பாய்
நன்மையும் கிருபையும் உண்டாகுமே
நடுங்கிடும் நெஞ்சத்தை கண்டால் இயேசு
கலங்கிடாதே என்றுன்னை கரம் நீட்டி அணைப்பார்
நல் சமாதானத்தை இதயத்தில் தருவார்
பிள்ளையின் பிள்ளைகளை கண்டு என்றும் மகிழ்வார்
நன்மையும் கிருபையும் உண்டாகுமே