karththarin pataippukal anaiththume – Kartharin padaippugal Anaithumae

கர்த்தரின் படைப்புகள் அனைத்துமே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

கர்த்தரின் படைப்புகள் அனைத்துமே – Kartharin padaippugal Anaithumae
கர்த்தரின் படைப்புகள் அனைத்துமே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
என்றும் அவரை துதியுங்கள்
என்றும் அவரை ஏற்றுங்கள்
கர்த்தரின் தூதுவ கணங்களே
அவரை புகழ்ந்து போற்றுங்கள்
வானிடை விரியும் தலங்களே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
வான்மேல் விரிநீர் அனைத்துமே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
கர்த்தரின் சமத்துவம் அனைத்துமே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
சூரிய சந்திர கோளங்களே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
வானிடை நிலவும் தாரைகளே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
மழையும் அத்துடன் பனியுமே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
காற்றும் கார்மேகவுமே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
நெருப்பும் நெருப்பின் அனலுமே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
குளிரும் அத்துடன் கனலுமே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
பனியும் வெண்பனி திரளுமே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
உறை பனியோடு குளிருமே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
வெளிச்சத்தினோடு இருட்டுமே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
மின்னல் ஒளியும் மேகங்களே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
மலைகளும் மலைகளோடு குன்றுகளுமே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
தரைமேல் விளைபயிர் அனைத்துமே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
தண்ணீர் சுரக்கும் ஊற்றுகளே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
கடல்களும் கடலுடன் நதிகளுமே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
திமிங்கவும் புனல்வாழ் அனைத்துமே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
வானுயர் பறவைகள் அனைத்துமே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
காட்டுமிருகம் நாட்டுமிருகம் அனைத்துமே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
மானிட பிறவி மக்களே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
நீதிமான்கள் மனசும் ஆத்துமமுமே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
சுத்தவாளரும் மனதாழ்மை உள்ளவருமே
கர்த்தரை புகழ்ந்து போற்றுங்கள்
பிதாசுதன் இஸ்பிரீத்து சாந்துவுமே
புகழ்ந்து போற்றுவோம் நாங்களும்
என்றும் அவரை ஸ்துதித்திடுவோம்
என்றும் அவரை ஏந்திடுவோம்