1.karththar engkal thurukkamum

கர்த்தர் எங்கள் துருக்கமும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.கர்த்தர் எங்கள் துருக்கமும்
அரண் பலமுமாமே;
உண்டாம் இக்கட்டனைத்தையும்
போக்குவார் அவர்தாமே.
பொல்லாங்கனின் சினம்
இப்போது மா விஷம்,
துஷ்டமும் இதையும்
அணிந்து உறுமும்
நிகர் புளியில் இல்லை.
2.எதற்கு நாங்கள் வல்லவர்?
இந்நீசர் சக்தியற்றோர்;
எங்களுக்காய் வேறொருவர்
போர் செய்வதற்கேற்பட்டோர்
யார்? இயேசு கிறிஸ்துதான்!
ஆ இந்தப் பலவான்
ஆம் எங்கள் ரட்சகர்;
சேனாபதி அவர்
ஜெயிப்பார் அவர்தாமே.
3.விழுங்க வரும் பேய்களால்
புவி நிரம்பினாலும்
பயப்படோம்; கர்த்தாவினால்
எதிர்த்து நிற்கக்கூடும்.
இருளின் பிரபு
சீறினாலும், அது
நசுக்கப்பட்ட பேய்,
தள்ளுண்ணத் தீர்ந்ததே;
ஓர் சொல்லினால் ஒழியும்.
4.பகைஞர் தேவ வார்த்தையைப்
பகைத்தும், அது நிற்கும்;
கர்த்தர் சகாயர், அவர் கை
வரம் தந்தாதரிக்கும்;
மாற்றார்கள் யாவையும்
ஜீவனையேதானும்
வாங்கினால், கேடாமோ?
இராஜ்ஜியம் அல்லோ
எங்களுக்கேயிருக்கும்.