Kartharin Kirubaiyaai Pirantha

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தரின் கிருபையாய்
பிறந்த கண்மணியே
கண்மூடி கண்ணுறங்கு
ஆராரிராரோ
கலங்காதே கண்மணியே
காலம் உள்ளவரை
அவரின் கிருபை காண்பாய்
ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிரரோ
மழலையின்றி தவித்தேன்
மன்னவனாய் நீ பிறந்தாய்
மகனே உன் பொன்சிரிப்பு
மனவேதனை மாற்றுதைய்யா
உனக்காக உறங்காமல்
உயிருக்குள் வைப்பேன்
உயிருள்ள நாளெல்லாம்
அவருக்காக வளர்த்திடுவேன்
கண்மணியே கண்ணுறங்கு
கண்மணியே நீ கண்ணுறங்கு
கர்த்தரின் தயவுக்காய்
பொறுமையுடன் காத்திருந்தேன்
கர்ப்பத்தின் நற்கனியாய்
என் வாழ்வில் நீ பிறந்தாய்
தேவனுக்காய் தேசமெல்லாம்
நற்செய்தி அறிவித்திட
உயிருள்ள நாளெல்லாம்
அவருக்காக வாழ்ந்திடு
கண்மணியே விழித்திடு
இயேசுவுக்காய் நீ புறப்படு
ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிரரோ