kartharin karam vallamaiyulla karam

கர்த்தரின் கரம் வல்லமையுள்ள கரம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தரின் கரம் வல்லமையுள்ள கரம்
சுத்தரின் கரம் சுகமாக்கிடும் கரம்-2
விடுதலை பெலன் சுகம் ஈந்திடும் கரம்
விதவித நோய்களை தீர்த்திடும் கரம் -2
1. அற்புதம் செய்திடும் அன்பின் கரம்
தாழ்மையில் உயர்த்திடும் தற்பரன் கரம்
காயங்கள் ஆற்றிடும் கர்த்தரின் கரம்
கடுந்துயர் போக்கிடும் வலது கரம்
2. தேவைகள் சந்திக்கும் தேவனின் கரம்
தேடிவந்தோர்க்கும் கொடுக்கும் கரம்
நாள்தோறும் நடத்திடும் நாதனின் கரம்
நாட்கள் போனாலும் உயிர் தந்திடும் கரம்