Kartharai Paaduven Lyrics

கர்த்தரை பாடுவேன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தரை பாடுவேன் அவரை நான் போற்றுவேன்
அவர் நாமம் உயர்த்துவேன்
அவரை நான் புகழுவேன்
1) அவரே என் அடைக்கலமாம்
அவரே என் தஞ்சமாம்
அவரே என் கோட்டையாம்
அவரே என் தேடலாம்
2) அவரே என் பெலனுமாம்
அவரே என் கீதமாம்
அவரே என் தகப்பனாம்
அவரை நான் உயர்த்துவேன்
3) என் யுத்த நாட்களில்
அவரே என் வெற்றியாம்
என் சோர்வின் வேளையில்
அவரே எனதாருதலாம்
4) அவரே என் இரட்சகராம்
அவரே என் தேவனாம்
அவர் நாமம் உயர்த்திடுவேன்
என் வாழ்வின் முடிவு வரை
5) என் வாழ்வின் பங்குமவர்
எனக்கான சொத்துமவர்
அவரை நான் பாடிடுவேன்
என் ஜீவ நாட்களெல்லாம்