Karthar Uyarthiduvaar Lyrics

கர்த்தர் உயர்திடுவார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் தேவன் தம்முடைய மகிமை செல்வத்தினால்
நம் குறைகளெல்லாம் கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கி நடத்திடுவார்
சோர்ந்து போகாதே மனமே – நீ (2)
கர்த்தர் உயர்திடுவார் – உன் கவலைகள் மாற்றிடுவார்
1.வேதனையோ எந்த நெருக்கங்களும்
இயேசுவின் நாமத்தில் விலகிடுமே
சோதனையோ வரும் சோர்வுகளோ
ஆவியின் பெலத்தால் அகன்றிடுமே
துதித்துப் பாடிடு மனமே – உன்
துயரம் தீர்ந்திடும் தினமே
2.பாவங்களோ பலவீனங்களோ
தேவ ஆவியால் நீங்கிடுமே
ஆனந்தத்தின் தைல அபிஷேகத்தால்
அனுதினம் உன்னை நிறைத்திடுவார்
மகிழ்ந்து பாடிடு மனமே – தேவ
மகிமை தேடிடு தினமே