Karthar Unnatharae Magimaiyil Siranthavarae song lyrics

கர்த்தர் உன்னதரே மகிமையில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தர் உன்னதரே மகிமையில் சிறந்தவரே
மகிமையின் தேவன் செயல்களை
நினைத்து- எதனை செலுத்திடுவாய் -2
ஆத்துமாவை காத்தனரே
அற்புதம் செய்தனரே
மறவாது என்றென்றுமாய்
அன்பு கூர்ந்திடுவாய்
மகிமை உன்னில் வெளிப்படவே
தம்மையே தந்தனரே
அனுதினமும் அவர் நாமமதை
சேவித்து வழி நடப்பாய்
உந்தனுக்காய் தேவகரம்
யாவையும் முடித்ததுவே
அவரது செய்கை அனைத்தையுமே
பூவினில் சாற்றிடுவாய்
நீதியின் நல் வாசல்களை
திறந்துமே நடத்தினாரே
துதிகளுடன் அவர் நாமத்தை
என்றுமே தொழுதிடுவாய்