Karthar Unnai Uyarthuvar Lyrics

கர்த்தர் உன்னை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தர் உன்னை உயர்த்துவார்
கருத்தாய் உன்னை நடத்துவார்
காலமெல்லாம் கரம்பிடிப்பார்
கலங்காதே மகனே – நீ (2)
1. பரிசுத்த வாழ்வு வாழ்ந்திடவே
பாசமாய் உன்னை அழைக்கின்றார்.
யோசேப்பை உயர்த்தின தேவன்
உன்னை பெரியவனாக்கி ஆசீர்வதிப்பார்
2. அனுதினம் அவரிடம் வாழ்ந்திடவே
அர்ப்பணம் இன்று செய்திடுவாய்
தானியேல் போல உன்னையுமே
தாழ்மையினின்று உயர்த்திடுவார்
3. கர்த்தரின் ஊழியம் செய்திடவே
கனிவுடன் உன்னை அழைக்கின்றார்.
உலகினில் உந்தன் பெயர்தனையே
புகழ்ச்சியாக்கி உயர்த்திடுவார்