karthar nallavar yesu nallavar

கர்த்தர் நல்லவர் இயேசு நல்லவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தர் நல்லவர் இயேசு நல்லவர்
உம் நாமம் எவ்வளவோ உயர்ந்தது
தூய ஆவியே துணையாளரே
உம் நாமம் எவ்வளவோ சிறந்தது
பாடிப் பாடி மகிழ்வேன் அல்லேலூயா
ஸ்தோத்திரித்து துதிப்பேன் அல்லேலூயா
ஆர்ப்பரித்து மகிழ்வேன் அல்லேலூயா
ஆராதித்து தொழுவேன் அல்லேலூயா-2
1. யேகோவாயீரே தேவையெல்லாம் சந்திப்பீரே (2)
இருக்கிற தேவனே எங்கள் நல்ல இரட்சகரே (2)
2. வானம் உந்தன் சிங்காசனம் பூமி உந்தன் பாதப்படி
ஒப்பில்லாத தேவனே யாருக்கும்மை ஒப்பிடுவேன்
3. நீரே பரிசுத்தர் கன மகிமைக்குப் பாத்திரர்
துதிகள் செலுத்தியே உம்மை உயர்த்துவேன்