Karthar En Meipparaai Irukirar

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்
நான் தாழ்ச்சி அடையேனே
என்றென்றும் என்னோடு இருக்கிறார்
குறை ஒன்றும் இல்லையே
1. புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த நீர் அண்டையில் நடத்துகிறார்
எந்தன் ஆத்துமாவை தேற்றி
நீதியின் பாதையில் கொண்டு போகிறார்
2. மரண இருள் பள்ளதாக்கில் நடந்தாலும்
தீமையை கண்டு அஞ்சிடேனே
என் தேவன் என்னோடு இருக்கிறார்
அவர் கோலும் தடியும் என்னை தேற்றும்
3. என் சத்துருக்கள் முன்பாக
பந்தியை ஆயத்தப்படுத்துகிறீர்
என் தலையை எண்ணெயால் அபிஷேகித்தீர்
என் பாத்திரம் நிரம்பி வழிகிறது
4. ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்மையும் கிருபையும் தொடர்ந்திடுமே
கர்த்தரின் வீட்டில் என்றென்றும்
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்