karaththile kuruththoolai pitiththitta palarkal

கரத்திலே குருத்தோலை பிடித்திட்ட
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Palm Sunday Songs collection.

கரத்திலே குருத்தோலை பிடித்திட்ட பாலர்கள்
ஓசன்னா பாடும் கீதம் காதில் வந்து கேட்குதோ -2
தாவீதின் குமரனுக்கு ஓசன்னா என்று சொல்லி -2
ஆடினார் பாடினார் கூடினர் தேடினர் – கரத்திலே
1.யாருமே ஏரிடாத குறுகுறு கழுதை
தாருமே ஆண்டவருக்கு என்று சீடர் கேட்டிடார் -2
நீருமே தேவை ஐயா ஆண்டவருக்கு என்றுமே -2
சேருமே வாருமே நாளுமே தினம் தினம் – கரத்திலே
2.கர்த்தரின் நாமத்தினால் வருகிற ராஜாவாம்
நித்யரும் ஸ்தோஸ்தரிக்கப்பட்டவரும் இவர்தான் -2
பரலோகின் சமாதானம் உன்னதத்தில் மகிமை -2
பாடியே போற்றியே வாழ்த்தியே புகழ்ந்தனர் – கரத்திலே
கரத்திலே குருத்தோலை பிடித்திட்ட பாடல் வரிகள், Karathilae Kurutholai Pidithitta lyrics