Karam Pidithavar Lyrics

கரம் பிடித்தவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கரம் பிடித்தவரே, என்னை காத்து மகிழ்பவரே
காலமெல்லாம், கைவிடாமல், நடத்தி செல்பவரே.
என்னை கரம் பிடித்தவரே, தினம் காத்து மகிழ்பவரே
காலமெல்லாம், கைவிடாமல், நடத்தி செல்பவரே.
1) கண்ணீரின் பாதையில் நடந்து போகையில் பதிலாய் வந்தவரே.
பாரோனின் சேனைகள் சுற்றிய போதிலும் மதிலாய் நின்றவரே(2)
முன்னும் பின்னும் என்னை நெருக்கி உம் கரம் தாங்கினதே
ஆபத்து நேரத்தில் அடைக்கலமாய் உம் செட்டைகள் மூடினதே (2)
என்ன செய்வேன் என்ன செய்வேன் நீர் செய்த நன்மைகட்காய்
இரட்சிப்பின் பாத்திரம் கரத்தில் எடுத்து உம் நாமம் போற்றிடுவேன் (2)
என்னை கரம் பிடித்தவரே தினம் காத்து மகிழ்பவரே
காலமெல்லாம், கைவிடாமல், நடத்தி செல்பவரே (2)
2) அக்கினி சூளையில் கட்டி எறிந்தாலும் உடன் இருந்தவரே
சிங்கத்தின் கெபியில் தூக்கி எறிந்தாலும் விடுவிக்கும் வல்லாரே (2)
நேற்றும் இன்றும், இன்றும் என்றும், என்றென்றும் மாறிடிரே
எக்காலமும் எந்நேரமும் நீரே தஞ்சம் ஆனீரே (2)
என்ன சொல்வேன் என்ன சொல்வேன், நீர் செய்த நன்மைகட்காய்
நன்றி சொல்வேன் நன்றி சொல்வேன் நீர் செய்த நன்மைகட்காய் (2)
என்னை கரம் பிடித்தவரே தினம் காத்து மகிழ்பவரே
காலமெல்லாம், கைவிடாமல், நடத்தி செல்பவரே (2)