Karam Pattri Nadanthiduvean Lyrics

கரம் பற்றி நடந்திடுவேன் கர்த்தர் இயேசுவில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கரம்பற்றி நடந்திடுவேன்
கர்த்தர் இயேசுவில் மகிழ்ந்திடுவேன் (2)
அவர் காட்டும் வழியில் உண்மையாய்
நடந்து ஆவியில் மகிழ்ந்திடுவேன் (2)
ராஜாதி ராஜாவுக்கே மகிமை
இயேசு ராஜனுக்கே
இறங்கிடும் தேவ ஆவியே
என்னை நிரப்பிடும் வல்ல ஆவியே
சத்துருவின் கோட்டைகளை
இயேசு இரத்தத்தால் ஜெயித்திடுவேன்
சத்திய ஆவி துணை கொண்டு என்றும்
புது பெலன் அடைந்திடுவேன்
நெருக்கங்கள் வரும்போது
என் நேசர் என் பட்சமுண்டு.
துதித்திடுவேன் என்றும் புகழ்ந்திடுவேன்
அவர் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்
அற்புதம் நடந்திடுமே
என்றும் மாறிடா தேவ அன்பால்
அல்லேலூயா பாடிடுவோம்
நம் அதிசய தேவனுக்காய்