kannukku imaippool ennai kakkinra thevane

கண்ணுக்கு இமைப்போல் என்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கண்ணுக்கு இமைப்போல் என்னை காக்கின்ற தேவனே
கறை நீக்கி கரம் பிடித்து என்னையும் அரவணைத்தீரே -2
நீரே என்னை காக்கும் நல் மேய்ப்பனே
நீரே என்னை வழிநடத்தும் நாதனே -2
தடைகள் தடுக்கி விழும் நேரம் சிறகுகளால் அரவணைத்தீர்
படைகள் எடுத்து பலர் வந்தும் பதறாமல் நின்று காத்தீர்
உள்ளம் கலங்கி வாழ்ந்து வந்தேன்
தன்னந்தனியாக நின்றேன்
உம் வாசனை வீச வைத்தீர்
வார்த்தையால் விடுவித்தீர்
நீர் மாத்திரம் எனக்கு போதும் -6
(தேவா )
வாழ்வே ஒளியே நீர்தானே -4
(எந்தன் )
என் சுவாசம் பிரியும் வரை
உம் வாசம் வீச வைப்பீரே
உம் நேசம் பிரியாமல் பாசம் வைப்பீரே -2
வாழ்வே ஒளியே நீர்தானே -4
(எந்தன்)