kanniyam meri en annai – Kanniyaam Mary en Annai

கன்னியாம் மேரி என் அன்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs and Roman Catholic Songs collection.

கன்னியாம் மேரி என் அன்னை – Kanniyaam Mary en Annai
கன்னியாம் மேரி என் அன்னையன்றோ
இகத்திலதால் ஒரு குறைவுமில்லேன் -2
ஆதியுமாயுள்ள தந்தையிடத்திலும்
அவள் என்னை நடத்துகின்றாள்
அருள் நிலையாயுள்ள இயேசுவினிடத்திலும்
அவள் இன்னும் நடத்துகின்றாள்
ஜீவனைக் காத்துமேதான்
நீதிப்பாதையில் நடத்துகின்றாள் – 2
மாய்ந்திடுமாம் இந்த பூவில் இருந்தாலும்
நானோ பொல்லாப்புக்கு பயப்படேனே
அன்னைதான் என்னோடிருப்பதினாலே
தங்கிடும் சாந்திதான் என் தலைமேல் -2
கன்னியாம் மேரி என் அன்னையன்றோ
எனக்கென்றும் வேண்டுதல் செய்திடுவாள்
எனது தெய்வத்திடம் அனுதினமும் -2
தேகத்தையும் ஆரோக்கியமாய் இருந்திடச் செய்திடுவாள்
இன்னும் என் ஆத்மா சந்தோஷத்தாலே வழிந்திட என்றுமாய் செய்திடுவாள்
நன்மையும் கிருபையும் என் வாழ்வினில்
பின்தொடர்ந்திடுமே அனுதினமும் – 2
இதோ இந்த பார்தலத்தில்
நான் இயேசுவோடும் வசிப்பேன் நலமாய் – 2
கன்னியாம் மேரி என் அன்னையன்றோ
இகத்திலதால் ஒரு குறைவுமில்லேன்