Kannirendilum Karunaipongudhae

கண்ணிரண்டிலும் கருணை பொங்குதே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Lent Songs collection.

கண்ணிரண்டிலும் கருணை பொங்குதே இயேசு
கைகள் இரண்டுமே கிருபை செய்குதே
அதற்காகவே சிலுவை சுமந்தேன்
அவர் முழுவதும் ரத்தம் வழியுதே -2
1.இன்று இரவில் கள்வனை போல் பிடித்து சென்றனரே
இயேசுவை இழுத்து சென்றதே
மேலாடை கழற்றி வாரில் அடித்து காறி உமிழ்ந்து
தலையில் ஓங்கி குத்தியதே
பாவம் போக்கும் ராட்சகர்கரை பரிகசித்ததே -நம்-2
அவர் சிரசிலே முள் மடியை சூடி மகிழ்ந்ததே-2
கோல்கதாவிலே கோரா குருசிலே
கூர் ஆணி முனையிலே
ஜீவன் போனதே – கண் இரண்டிலும்
2.விதை அழிந்து செடி வளர்ந்து கனி கொடுத்ததே
ரட்சிப்பின் கணி கொடுக்குதே
அதை உண்டு மகிழ மனித கூட்டம் திரண்டு வருகுதே
மனம் திருந்தி வருகுதே
தேவ சித்தம் நிறைவேறும் நாளும் நெருங்குதே -நம்-2
அந்நாளுக்குள்ளெ ஆயத்தமாய் நாம் இருக்கணுமே-2
அன்பின் ரூபமே அணையா தீபமே
எனை ஆட்கொள்ளுமே வரும் நாளெல்லாமே