kanneerenamma – Kanneeraynamma

கண்ணீரேனம்மா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கண்ணீரேனம்மா – Kanneeraynamma
கண்ணீரேனம்மா
கருணையின் இயேசு உன்னை
விடமாட்டாரம்மா
கவலை வேண்டாம்மா
கருணையின் இயேசு உன்னை
விடமாட்டாரம்மா
கருணை காட்டி
கலக்கம் நீக்கி -2
இயேசே துணையம்மா – கண்ணீரேனம்மா
உனக்கொன்றும் இல்லையே
கொண்டுவர் இல்லையே
நிந்தித்தே உன்னை
அவமானம் செய்தாரா
தலையெழுத்து இதுதானோ
அடுத்தென்ன நடக்குமோ
நாளைக்கு நடப்பதை
சிந்தித்து கலக்கமா
கலங்காதே என்ற இயேசு
வார்த்தையை மறந்தாயா
மாறாவாய் மதுரமாய்
மாற்றினார் கண்டாயே -2 – கண்ணீரேனம்மா
உனக்காறும் இல்லையே
ஏதும் செய்ய இயலாது
சொல்லிலே உன்னை
சோர்ந்திட செய்தாரா
பூட்சிதான் நீயென
எப்பொழுதும் இப்படித்தான்
என் வாழ்க்கை மாறாதென்று
உன் வாழ்வில் நினைத்தாயா
இருக்கிறேன் என்ற இயேசு
வார்த்தையை மறந்தாயா
கண்ணீரை நாட்டிமாய்
மாற்றுவார் பார்ப்பாயே – 2 – கண்ணீரேனம்மா