Kanmanipalae Kaakkum

கண்மணி போல் காக்கும் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கண்மணி போல் காக்கும் இயேசு ராஜா
கைவிடாத கர்த்தர் இயேசு ராஜா
ஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரம்
ஊற்றிடும் என் நாவில் ஊற்றிடும்
இயேசு ராஜனே ஸ்தோத்திரம் அல்லேலூயா
ராஜ ராஜனே ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா
1. நான் பிறந்த நாள் முதல் இந்த நாள்
வரையிலும் ஆதரித்து வந்த இயேசுவே
இந்த மட்டும் கைவிடாமல்
இனி மேலும் கைவிடாமல்
இன்றும் என்றும் தேற்றும் இயேசுவே
தந்தை தாயின் பாசமோ
உந்தன் பாசமாகுமோ
சொந்தம் பந்தம் நேசமும்
உந்தன் நேசமாகுமோ
போதுமையா உந்தன் நேசமையா-2
2. தீமையான யாவையும் நன்மையாக
மாற்றினீர் தீங்கு நீக்கி என்னை மீட்டிட்டீர்
இன்னல் வேளை வந்த போது
நல்ல வேளையாக வந்து
நண்பனாக நன்மை செய்திட்டீர்
இரக்கமுள்ள தேவனே இறங்கி வந்த நாதனே
மீட்க வந்த மீட்பரே தேடி வந்த தெய்வமே
போதுமையா உந்தன் நேசமையா