kanmani pol kakkum

கண்மணி போல காக்கும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கண்மணி போல காக்கும்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
கண்ணீரெல்லாம் துடைத்திடும்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம்
உள்ளங்கையில் வரைந்ததால்
ஒப்புவித்தேன் என்னையே-2
1.கொல்கொதா மலையிலே
கோர சிலுவை சுமந்தீரே – பாவமற்ற
ஆட்டுக்குட்டி பார சிலுவை சுமந்தீரே
இரத்தத்தினால் விடுதலை
கிருபையாய் நித்தியமே -2
எந்தன் நீதி குப்பையையா உம்மாலே
நான் நீதிமான் – உம் பிள்ளையாய்
அழைத்தீரே சுத்திகரித்தீர் ஆவியே
நான் பிழைக்க நீர் மரித்தீர்
நான் என்றுமே உந்தன் பிள்ளை
கன்மலை நாயகன் கர்த்தருக்கு
ஸ்தோத்திரம் – கல்வாரி வேந்தனாம்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம்
கண்டிடுவேன் இன்ப கானான்
பெற்றிடுவேன் ஜீவ கிரீடம்
கண்மணி போல காக்கும் பாடல் வரிகள், Kanmani Pola kaakkum Lyrics