Kanmalai Meethu En Kaalgal

கன்மலை மீதென் கால்கள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கன்மலை மீது என் கால்கள் நிறுத்தினீர்
உன்னதங்களில் உட்கார செய்தீர் -2
உழையான சேற்றில் உழன்ற என்னையும்
தூக்கினீர் கழுவினீர் காத்து வருகிறீர்-2
பாவங்களை மன்னித்தீர்
சாபங்களை நீக்கினீர்
சத்துருவின் கையினின்று
விடுதலை அளித்தீர்-2
தினம் தினம் உம் புகழை நான் பாடுவேன்-2
இயேசையா இயேசையா
உம் புகழ் பாடுவேன் – கன்மலை
2.எல்லையில்லா ஆனந்தம்
எந்தன் வாழ்வில் வந்ததையா
சொல்லொன்ன பேரின்பம்
என் உள்ளத்தில் பொங்குதையா-2
ஜீவனுள்ள நாளெல்லாம் நான் உம்மை பாடுவேன்-2
இயேசையா இயேசையா
உம் புகழ் பாடுவேன் – கன்மலை