Kanmalai Meethen kaalgal Niruthi

கன்மலை மீதென் கால்கள் நிறுத்தி
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கன்மலை மீதென் கால்கள் நிறுத்தி
அடிகள் உறுதிபடுத்தும்
எங்கள் (தேவா) இறைவா எங்கள் (தேவா) இறைவா
கன்மலையானவர் கோட்டை துருகமானவர்
எனக்கொத்தாசை வரும்
பர்வதமாகி பாதுகாப்பவர்
1.வறட்சியான காலம்
என்னை திருப்தியாக்கினீர்
நீர்பாய்ச்சலான தோட்டம்
போல செழிப்பாக்கினீர்
உருக்கமான இருக்கங்களால் முடி சூட்டினீர்
மனக்கலக்கம் மாற்றி உமக்குள்
புது சிருஷ்டியாக்கினீர்
2.உத்தமமான வழியினில்
என்னை நித்தமும் நடத்தினீர்
விடாய்த்து போன ஆத்துமாவை
ஆற்றி தேற்றினீர்
உலர்ந்து போன எலும்பை
உயிர்கொடுத்து எழுப்பினீர்
வற்றாத நீருற்றைப் போல வளமாக்கினீர்
3.கர்த்தருக்காக பொறுமையுடன்
காத்திருந்தேனே அவர் என்னிடமாக
சாய்ந்து எந்தன் கூக்குரல் கேட்டார்
குழியில் விழுந்து மடிந்திடாமல்
வலக்கரம் பிடித்தார்
அவர் துதியை பாடும் பாடல்
எந்தன் வாயினில் கொடுத்தார்.