1. kanavoor vivakaththirku

கானாவூர் விவாகத்திற்கு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Wedding Songs collection.

1. கானாவூர் விவாகத்திற்கு
கிருபையாய் சென்றவா!
இந்த மணக் கூட்டத்திற்கு
அன்பதாய் வாருமையா
மாப்பிள்ளை பெண்(ணை)
வாழ்த்த வாரும் இயேசுவே!
2. முந்தன் உந்தன் ராஜ்ய சித்தி
தேட யிவர்க் கோதுமேன்;
ஜெபம் நேர் ஜீவியம் பக்தி
என்ற வரம் ஈயுமேன்
மாப்பிள்ளை பெண்(ணை)
வாழ்த்த வாரும் இயேசுவே!
3. சோர்வடையா ஆவி பெற்று
போரில் வெல்ல அருளும்;
மாய்கை மெய்யாய் விட்டுவிட்டு
உம்மில் வாழ அருளும்
மாப்பிள்ளை பெண்(ணை)
வாழ்த்த வாரும் இயேசுவே!
4. சேனையிலே உண்மையாக
போர் செய்ய அருள் தாரும்;
பாவாத்மாக்கள் அன்பதாக
உம்மைச் சேர அருளும்
மாப்பிள்ளை பெண்(ணை)
வாழ்த்த வாரும் இயேசுவே!