kanamal poona aatu nan

காணாமல் போன ஆடு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காணாமல் போன ஆடு நான்
கண்டவுடன் கண்ணு கலங்குதய்யா
துன்மார்க்கத்தில் துள்ளி திரிந்தேன் ஐயா ஏசையா
துக்கத்தோடு ஏங்கி நின்றீர் ஐயா
உண்மையானாய் (உண்மையாய்) நான் இருக்க
தகுதி எனக்கில்லை
உம்வீட்டில் வேலையாளில்
ஒருவனாய் வைத்துக்கொள்ளும்
உமக்கும் பரத்திற்கும்
முன்பாக பாவம் செய்தேன்
இனிநான் மகனாக தகுதியே
எனக்கு இல்லை – காணாமல்
அன்பான என் தந்தையே
ஓடி வந்து கட்டி அணைத்தேன்
புத்தாடை உடுத்தினீரே
மோதிரங்கள் அணிவித்தீரே
உண்மையானாய் (உண்மையாய்) நான் இருக்க
தகுதிப்படுத்தினீரே
உமக்காய் நான் வாழ
கிருபை எனக்கு தந்தீர்