kanakkooti thiru kankal ventum-en

காணக்கோடி திரு கண்கள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காணக்கோடி திரு கண்கள் வேண்டும்-என்
கண்கள் குளிரக் காண்கிறேன்
வல்ல தேவன் சிறு புல்லணை மேலே
கந்தை அணிந்த மகவாய் காண்கிறேன்
எல்லா ஜனத்திற்கும் மிக மகிழ்ச்சியை தந்திடும்
நற்செய்தியினை இன்று கேட்கிறேன்
பரனுக்கு மகிமையும் மண்ணில் சமாதானம் பிரியமும்
உண்டாகும் எனும் துதி கேட்கிறேன்
விண்ணின் வாசல் திறந்தது
மண்ணுடன் விண்ணும் இணைந்தது
பாதையாய் பரமன் பிறந்தது புதுமையே
பாவக் காரிருள் பனிபோல் நீங்குது
சாநிழல் ஓடி மறையுது
ஜீவ இரட்சகன் இயேசு பிறந்தது புதுமையே
இது இனிமை இது இனிமை இது இனிமை
வானமோ பூமியோ கடல்கள் விண்மீன்களோ
மழை மேகமோ மரங்களோ நீந்திடும் மீன்களோ
யாவும் படைத்த பரமன்
வார்த்தை மனுவாகினார்
பரமனே பனிப்புகழ் நடுவினில் நீந்த குடியேறினார்
விண் அமிர்தமே சுகிர்தமே
திருமுகம் இன்று தரிசிப்பேன்
எந்தன் ராஜனாய் இன்று வந்து அரசாளுமே