kalvariyin antaiyil

கல்வாரியின் அண்டையில்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

கல்வாரியின் அண்டையில்
உம் கண்கள் என்னை கண்டதே
நம் பாரங்கள் சுமந்து
நம் நேசர் தொங்குகின்றார்
அந்தோ கல்வாரி அன்பே
என்னையும் கண்ட அன்பே
சிலுவை எனக்கு ஜெயம்
நீர் மரணத்தை வென்றதாலே
சிலுவை எனக்கு ஜீவன்
என் இரட்சிப்பு வந்ததாலே
ஈசோப்பினால் கழுவும்
வெண்மையாய் சுத்தமாவேன்
உம்மோடு உயிர்த்தெழவே
உமக்காக வாழ்ந்திடவே
வாரினால் அடித்த போதும்
மன்னித்த தெய்வ அன்பே
உம் தழும்புகளால் சுகமே
உம் இரத்தத்தால் வரும் ஜெயமே
அந்தோ கல்வாரி அன்பே
காயங்கள் ஏற்ற அன்பே
கல்வாரி சிகரம் அதில் கலங்கரை விளக்காகினீர்
கரைதேடும் என் படகை கரை சேர்க்க பலியானீரோ
அந்தோ கல்வாரி அன்பே
என்னையும் மீட்ட அன்பே
காட்டு ஒலிவ மர
கிளையாக இருந்த என்னை
நல்ல ஒலிவ மரம்
உம்மில் இணைத்த அன்பே
அந்தோ கல்வாரி அன்பே
ஜீவனை தந்த அன்பே