kalvariyil enakkay sinthina iraththam

கல்வாரியில் எனக்காய் சிந்தின

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

கல்வாரியில் எனக்காய் சிந்தின இரத்தம்
கல்வாரியில் எனக்காய் சிதைந்த தேகம்
கல்வாரியில் எனக்காய் கதரும் சத்தம்
கல்வாரியில் எனக்காய் பிரிந்த சுவாசம்
இயேசுவே உம் அன்பிற்கு அளவில்லையே
இயேசுவே உம் இரக்கத்திற்கு முடிவில்லையே
இயேசுவே உம் தாழ்மைக்கு ஈடில்லையே
இயேசுவே உம் கிருபைக்கு இணையில்லையே
1. ஆணிகள் துளைத்த கரம் கால்கள்
தேகத்தில் வாரின் தழும்புகள் -2
என் காயம் ஆற்றிட
நான் குணமாகிட -2
பாடுகள் ஏற்றீரே உம் அன்பை உயர்த்திடுவேன்
பாடுகள் ஏற்றீரே உம் அன்பை ஆராதிப்பேன்
2. ஜீவ பலியாக வந்தவரே
ஜீவனை ஈந்தென்னை மீட்டிரே
சிலுவையில் சிந்தின இரத்த வெள்ளம்
என்னில் பாய்ந்து மீட்பைத்தந்ததே -2
உம் நாமம் உயர்த்திடுவேன்
உம்மையே ஆராதிப்பேன் -2
கல்வாரியில் எனக்காய் சிந்தின பாடல் வரிகள், Kalvariyil Enakkaai Sinthina Lyrics