kalvari siluvaiyai nookki nan parkkaiyil

கல்வாரி சிலுவையை நோக்கி நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கல்வாரி சிலுவையை நோக்கி நான் பார்க்கையில்
என் உள்ளம் பதறுதே என் இதயம் துடிக்குதே
உந்தன் கைகள் கால்களில் இரத்தம் ஆறாய் ஓடுதே
உந்தன் முகத்திலும் சிரசிலும் இரத்தம் பீறிட்டு வழியுதே
எனக்காகவே நீர் சிலுவையை சுமந்தீர்
எனக்காகவே நீர் பாடுகள் பட்டீர்
எனக்காகவே நீர் ஜீவனை தந்தீர்
என் பாவம் போக்க நீர் சாபமே ஆனீர்
உந்தன் அன்பிற்கு ஈடாக எதுவுமே
இந்த உலகத்தில் இல்லை என் இயேசுவே
உந்தன் அன்பிற்காய் எந்தன் வாழ்க்கையை
உம் கைகளில் தருகிறேன் தேவனே
என் இயேசுவே.. என் நேசரே ..
என் தேவனே .. என் இராஜனே
கோல்கோதா மலையினில் நீர் ஏறி செல்கையில்
உம் முதுகை வாரினால் அடித்து சிதைத்தனர்
உந்தன் தலையை முற்கிரீடத்தால் வைத்து அழுத்தினர்
உந்தன் விலாவை ஈட்டியால் காயப்படுத்தினர்
கல்வாரி சிலுவையை நோக்கி நான் பாடல் வரிகள், Kalvaari Siluvaiyai Noki naan Lyrics