kalvari malai meethile karththar iyesuve

கல்வாரி மலை
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

கல்வாரி மலை மீதிலே கர்த்தர் இயேசுவே
தேவ அன்பின் சின்னமாய்
சிலுவையில் தொங்கினார் – கல்வாரி
சரீரம் முழுதும் காயம் அவர் சிரசிலே முள்கிரீடம்-2
முகத்தில் உமிழ் நீர் தேக்கம் பரிதாபமான தோற்றம் -2
எதற்காய் உனக்காய் எனக்காய் -2-கல்வாரி
பரியாசக்காரர் சூழ்ந்து மொழிந்தார் வார்த்தை இகழ்ந்து -2
பிதாவே மன்னியும் என்று பரிந்துரைத்தார் அன்பு கூர்ந்து -2
எதற்காய் உனக்காய் எனக்காய் -2-கல்வாரி
முடிந்தது என்று சொல்லி ஜீவன் விட்டார் தலை தனை சாய்த்து -2
கிருபாசனத்தண்டை சேரும் திரைகிழிந்தும் தேவ சித்தம் -2
எதற்காய் உனக்காய் எனக்காய் -2-கல்வாரி