kalvari kalvari

கல்வாரி கல்வாரி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கல்வாரி கல்வாரி
சிலுவையில் சிலுவையில் சிலுவையில்
1. அப்பா பிதாவே இவர்களுக்கு
மன்னியுமே என்று வேண்டிக்கொண்டார் (2)
தப்பாமல் தம்முடன் அரையுண்ட
கள்வனுக்கும் அருள் செய்து விட்டார் (2)
2. தாயே அதோ உந்தன் மகனை பார்
சீஷனே அதோ உந்தனின் தாய் (2)
என்றே கூறிடும் அன்பு மொழி
நன்றே அன்றவர் உரைத்தனரே (2)
3. ஏலோயி ஏலோயி லாமா ஸபத்தானி
என்றே இறைவா நீர் ஏங்கிடவே (2)
எப்பாவமும் செய்யா உந்தனுக்கு
இப்பாடுகள் எல்லாம் என்னாலன்றோ (2)
4. ஜீவ தண்ணீர் தருவேன் என்றவர்
ஜீவாதிபதியாக இருந்தும் (2)
தாகமாயிருக்கிறேன் என்று
தாரணியில் தேவா சொன்னதேனோ (2)
5. முடிந்ததென்றுரைத்திட்டவரே
முடிவில்லா வாழ்வினை தருபவரே (2)
தந்தாய் தந்தேன் எந்தன் ஜீவனை
என்றே தம் உயிர் ஈந்தனரே (2)
கல்வாரி கல்வாரி பாடல் வரிகள், Kalvari Kalvari lyrics