kalvari anpaik kanave – Kalvari Anbai Kaanavea

கல்வாரி அன்பைக் காணவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs and Lent Songs collection.

கல்வாரி அன்பைக் காணவே – Kalvari Anbai Kaanavea
கல்வாரி அன்பைக் காணவே
குருசில் மாண்ட இயேசுவை பார்
அனுபல்லவி :
அந்த கோர சிலுவையில் சரீரம் இழந்து உன்னை மீட்டெடுத்த இயேசுவை பார்
1 இந்த அன்பிற்கு இணையாய் ஒன்றுமில்லை
முன்னோரின் பாவத்தால் வந்த நிலை
மூன்று ஆணிகள் ஏற்று முற்கிறீடம் அணிந்து
உன்னை மீட்டெடுத்த இயேசுவை பார்!
2 பாவத்தால் இருண்ட லோகை மீட்க
மைந்தனை அனுப்பி தியாகம் செய்து
மூன்று நாளில் உயிர்த்து முகில் சூழ பறந்து
நமக்காய் தூயாவி தந்தாரே!
3 எத்தனை பேர் இங்கு மீட்படைந்தோம்
ஜீவ புத்தகத்தில் பேர் இணைத்தோம்
மூன்று படிவத்தில் வாழும் திரித்துவ தெய்வத்தை
நம்பி மோட்சக்கரை சேர்ந்திடுவோம்