Kalanguvathen Kanneer Viduvadhumen

கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன் – 2
நேசரின் கரங்களே தேற்றுமே
இயேசுவின் காயங்கள் ஆற்றுமே
1. சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்
உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார் – (2)
அழைத்ததேவன் உன்னைநடத்திச்செல்வார்-2கண்ணீரை
துடைப்பார் கவலைகள் மாற்றுவார் – 2 புது ஜீவன்
ஊற்றுவார் புது சிருஷ்டியாக்குவார்
2. அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்
அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார் – (2)
நீதிதேவன் உனக்கு நியாயம் செய்வார் – 2 நிச்சயம்
பலன்தருவார் உறுதியாய் உயர்த்திடுவார்-2 தோல்வியில்
ஜெயம் தருவார் வியாதியில் சுகம் தருவார்
3. துன்பப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை
தள்ளப்பட்டாலும் மடிந்து போவதில்லை – (2)
வாழும்தேவன் உன்னைக்காத்துக்கொள்வார்-2இயேசுவின்
மகிமையுமே உன்னிலே வெளிப்படுமே – 2 சீக்கிரம்
நீங்கிடும் இந்த இலேசான உபத்திரவம்
(மரித்தவர் வீட்டில் ஆறுதலாக பாட)
4. பிரிவில் வாடும் உன் இதயம் பார்க்கிறார்
கதறி அழும் உந்தன் கண்ணீர் காண்கிறார்
தாயைப் போல உன்னை தேற்றிடுவாரே – ஒரு
தந்தையைப் போல உன்னை ஆற்றிடுவாரே- இழந்த
உறவாக உன்னோடு வாழ்ந்திடுவார் -2 கரம் பற்றி
எந்நாளும் உன்னோடு நடந்திடுவார்