kalangkitathe enthan pillaiye va enru

கலங்கிடாதே எந்தன் பிள்ளையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கலங்கிடாதே எந்தன் பிள்ளையே வா என்று
கரம் நீட்டி அழைத்திடும் என் இயேசுவே
அஞ்சிடாதே உந்தன் அருகினில் உண்டென்று
ஆதரவாய் தேற்றும் அன்புள்ளமே
(Chorus)
உம்மை நினையாமல் கலங்கி நின்றேன்
உடனிருப்பதை உணராமல் அலைந்தேன்
உம்மை அறியாமல் பாழாகி போனேன்
உம் அழைப்பேற்று ஓடோடி வந்தேன்
உம் பாதத்திலே சரணடைந்தேன்
1) தாய் மறந்தாலும்
தந்தை தள்ளினாலும்
உறவுகள் யாவுமே ஒதுக்கி வைத்தாலும்
நண்பனாய் நீர் உண்டு
உயிர்தோழனாய் உடன் உண்டு
2) சூழல்கள் எல்லாம்
எதிர்த்து நின்றாலும்
சோதனை தினமென்னை நொறுங்க செய்தாலும்
வல்லவர் நீர் உண்டு உம் வார்த்தையால் வாழ்வுண்டு