kalaith thenral veesitum – Kaalai thendral veesidum

காலைத் தென்றல் வீசிடும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காலைத் தென்றல் வீசிடும் – Kaalai thendral veesidum
காலைத் தென்றல் வீசிடும் நேரம்
பூக்கள் பனியால் நனைந்திடும் நேரம்
(குயிலின் சத்தம் கேட்டிடும் நேரம்)
உம் பாதம் அமர்ந்திருப்பேன்
நான் உம் சத்தம் கேட்கவே-2
என்னை நிரப்பிடும் உங்க பிரசன்னத்தால் ஆவியானவரே-2
1. உலர்ந்த போன என் எலும்புகளை
உயிர் பெற செய்திடுமே-2
உயிர் பெற செய்திடுமே
2. வெறுமையான என் பாத்திரத்தை
நிரம்பிட செய்திடுமே-2
நிரம்பிட செய்திடுமே
3. தகப்பனே உம் செல்லப் பிள்ளையாய் வாழ்ந்திட செய்திடுமே -2
வாழ்ந்திட செய்திடுமே