Kalaimaangal Neerodai Thaedum Enthan

கலைமான்கள் நீரோடை தேடும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

கலைமான்கள் நீரோடை தேடும் – Kalaimaangal Neerodai Thedum
கலைமான்கள் நீரோடை தேடும்
எந்தன் இதயம் இறைவனை நாடும்
உள்ளத் தாகம் உந்தன் மீது
கொண்ட போது எனக்கு
வேறென்ன வேண்டும் – மான்கள் நீரோடை தேடும்
காலம் தோன்றா பொழுதினிலே
கருணையில் என்னை நீ நினைத்தாய்
உயிரை தந்திடும் கருவினிலே
அருளினை பொழிந்து அரவணைத்தாய்
குயவன் கையாலே மண்பாண்டம் உடைந்திடும்
கதையின் நாயகன் நான் இன்று
பாறை அரணாய் இருப்பவரே
நொறுங்கிய இதயம் நான் சுமந்தேன்
காலை மாலை அறியாமல்
கண்ணீர் வடித்திடும் நிலையானேன்
சிதறிய மணிகளை கோர்த்து எடுத்தால்
அழகிய மணிமாலை நான் ஆவேன்