kalai thoorum unthan kirupai puthithe

காலை தோரும் உந்தன் கிருபை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காலை தோரும் உந்தன் கிருபை புதிதே
மாறாததே உந்தன் அன்பு
எந்தன் நாவில் உந்தன் துதியை வைத்தீர்
கர்த்தாவே நீர் எனக்கு போதும் – 2
நீர் போதுமே நீர் போதுமே
என் வாழ்வில் நம்பிக்கையே
நீர் போதுமே நீர் போதுமே
என் வாழ்வில் நம்பிக்கையே நீரே
1.சிங்கக்குட்டிகள் தாழ்ச்சி அடைந்து
பசியில் வாடி கிடைக்கலாம்
மழையின்றி வயல்வெளிகள் எல்லாம்
பலன் அற்று போயிருக்கலாம் -2
கர்த்தாவே உம்மை தேடும் மனிதற்கோ
ஒருபோதும் ஒரு குறைவும் இல்லை -2
2.வானம் பூமி யாவும் மாறினாலும்
மாறாது உந்தன் வார்த்தையே
வாக்குத்தத்தம் செய்த தேவரீர் நீர்
என்றென்றும் உண்மை உள்ளவர் -2
சொன்னதை நிறைவேற்றுவார் நிச்சயம்
உம்மை நம்பினோர்க்கு குறைவில்லையே -2