kadakka mudiyatha nathiye adakka

கடக்க முடியாத நதியே அடக்க

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கடக்க முடியாத நதியே
அடக்க முடியாத அலையே
உடைக்க முடியாத உறவே
உடைக்கப்படுதே என் சுயமே
நிறைந்து வழியும் என் அகமே
நினைவு முழுவதும் உன் முகமே
1. என் கட்டுப்பாட்டின் எல்லைக்கோட்டை
கடந்துவிட்டேன் கர்த்தரின் ஆவியினால்
என் இஷ்டப்படி ஏதும் செய்ய இயலவில்லை
கர்த்தரின் வசமானேன் என்
கால்களும் மண்ணோடு இல்லாமல் விலக
சிந்தையும் உலகத்தில் வெறுப்புடன் உதற
கர்த்தரின் ஆவிக்குள் நான் மாறினேன்
நிச்சயம் ஆழத்தில் நான் மூழ்கினேன்
2. கணுக்கால் அளவு போதவில்லை
கதறி நான் ஜெபித்தேன்
முழங்கால் அளவிலும் திருப்தியில்லை
புரண்டிடும் நதியினில்
இடைதானே அடைந்தேன்
திரண்டிடும் நேசத்தால்
உலகினை மறந்தேன் சின்ன
வட்டங்களை விட்டு வெளியேறினேன்
அன்பின் பிதா திட்டங்களை அனலாகினேன்