Kaangindra Yaavaiyum

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காண்கின்ற யாவையும் கர்த்தரே படைத்தது,
வானம் பூமியை வார்த்தையே பிரித்தது,
அடடா அழகான காட்சிகள்
தேவனால் உருவான சாட்சிகள்.
பறவைகள், மிருகங்கள், பூமியின் கனிமங்கள்
அனைத்தையும் நலமென்று அவர் போற்றினார்
மனிதனை தம் சாயலாக்கினார். (காண்கின்ற...)
ஆதாம் ஏவாள் தம்பதியைப் படைத்தவர்
குடும்பம் என்ற அமைப்பையும் அமைத்தவர்
பலுகிப் பெருகும் ஆசியை அளித்தவர்
பசுமை செழிப்பை பரிசாய் அளித்தவர்.
கடற்கரையின் மணல்துகளாய்
கடற்கரையின் மணல்துகளாய்
பெருகியே வளமோடு வாழ்கவே! (காண்கின்ற...)
சுவாசம் ஊதி உயிரையும் தந்தவர்
நேசம் வைத்து நிதம் என்னைக் காப்பவர்
தனது சாயல் எனக்கும் தந்தவர்
துணையாய் எனக்கு முன்னால் செல்பவர்
வாழும்வரையில் வணங்கிடுவேன்
வாழும்வரையில் வணங்கிடுவேன்
படைத்தார் எனைத்தாங்கும் வல்லவர் (காண்கின்ற...)