Kaanaoorin Kalyana Veetuku Lyrics

கானா ஊரின் கல்யாண

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Wedding Songs collection.

வாருமையா உள்ளே வாருமையா -2
கானா ஊரின் கல்யாண வீட்டுக்கு வந்தவரே
வந்தவரே
எங்க வீட்டுக்கு இப்போ இங்கே வாருமையா
வாருமையா
நல்ல காரியம் நடக்குதுங்க வாருமையா
வாருமையா
ஊருக்குள்ளே இப்போதானே வாருமையா
பலரும் சொன்னாங்க இனிமே நடக்காது
பலரும் வச்சாங்க
பொறாமையில் சென்றாங்க
நீங்க வந்தாலே எல்லாமே மாறுதையா
நீங்க வந்தாலே எல்லாமே மாறுதையா
வாங்கய்யா எனக்குள்ளே வாங்கய்யா
வாங்கய்யா சபைக்குள்ளே வாங்கய்யா
ஏலேலேலேலோ ஏலேலேலோ
ஏலேலேலேலோ
விருந்திலே திராட்சை ரசம் குறைந்து போனதே
குறைகள் வந்ததாலே குழப்பங்கள் சூழ்ந்ததே
குறை சொல்ல ஒரு கூட்டம் திட்டம் போட்டதே
இயேசுவும் தாயோடு விருந்தை பார்த்தாரே
அற்புதம் செய்ய சொன்ன தாயின் வார்த்தைகள்
முதலாம் அற்புதத்தை நடத்தி வைத்ததே
குறையை நிறைவாக்க கானா சென்றீரே
வாழ்வை செளிப்பாக்க இங்கே வந்தீரே
வாருமையா எனக்குள்ளே வாருமையா
வாருமையா சபைக்குள்ளே வாருமையா
வாருமையா வீட்டுக்குள்ளே வாருமையா
வாருமையா எங்களுக்குள் வாருமையா
ஆறு கற்சாடி அது காலி கற்சாடி
தண்ணீரினாலே நிரப்ப சொல்லி கட்டளையிட்டீரே
தண்ணீரோ திராட்சை ரசமாய் மாறி போனதே
அதிர வைக்கும் அற்புதத்தை செஞ்சு வச்சீங்களே
தண்ணி கலரு மாறுச்சு அந்த ருசியும் மாறுச்சு
அந்த ஊரு வாழுச்சு
அந்த குடும்பம் வாழுச்சு தண்ணி கலரும் மாறுச்சு
அந்த ருசியும் மாறுச்சு அந்த ஊரு வாழுச்சு
அந்த குடும்பம் வாழுச்சு
வாருமையா வாருமையா வீட்டுக்குள்ளே
வாருமையா
தேடி வந்த தெய்வமே அழைக்கிறோம்
வாருமையா வாருமையா
எங்களுக்குள் வாருமையா
கனாவூரின் கல்யாண வீட்டுக்கு
வந்தவரே
எங்க வீட்டுக்கு இப்போ இங்கே
வாருமையாயா
நல்ல காரியம் நடக்குறீங்க வாருமயா
ஐயா எங்க ஊருக்குள்ளே இப்போதானே வாருமையா
பலரும் வந்தாங்க வாழ்த்திட்டு
போனாங்க சிலரும் வந்தாங்க
பொறாமைய போனாங்க பலரும் வந்தாங்க
வாழ்த்திட்டு போனாங்க சிலரும் வந்தாங்க
பொறாமைய போனாங்க
நீங்க வந்தாலே எல்லாமே மாறுதையா
நீங்க வந்தாலே எல்லாமே மாறுதையா
Kaanaoorin Kalyana Veetuku Lyrics in English