Kaalai Maalai Lyrics

காலை மாலை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காலை மாலை எல்லாம் சமாதானம்
வாழ்நாள் முழுவதும் அவர் நீதி – 2
என் கர்த்தர் என் பாதைகளை
நேராக்கி நடத்துகின்றார் – 2
1.ஒவ்வொரு நாளும் அவர் நன்மைகளை (கிருபைகளை)
நான் அனுபவிக்கும் நல்ல பாக்கியம் தந்தார் – 2
எந்தன் குறைவெல்லாம் நிறைவாக்கினார்
கிறிஸ்த்துவின் வெற்றியாலே வெற்றி தந்தார் – 2
2. மண் என்று எண்ணினோர் கண் முன்பாக
என்னை பொன்னாக உயர்த்தின தகப்பன் நீர் – 2
எந்தன் கரம் பிடித்து என்னை அழைத்து சென்று
ராஜாவின் அமர்வை தந்தவரே நல் – 2