Kaakkum Valla Thaevan Kaividaatha Thaevan

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காக்கும் வல்ல தேவன் கைவிடாத தேவன்
காத்திடுவார் என்றுமே – நம்மை
செட்டையின் கீழே கனிவாக மூடி
காத்திடுவார் தினமும் என் ஆண்டவர்
ஆதியும் அந்தமும் ஆனவரே ஆறுதல் தந்து அணைத்தவரே
மறுமையை விட்டு இந்த இம்மைக்கு வந்து
சிலுவை அடைந்த நம் சீர் இயேசு நாதர்
சிலுவையில் எங்கள் பாவம் போக்க மரித்தவரே
அகிலத்தையும் தம் ஓர் வார்த்தையால் குறைவின்றி தானே படைத்தவரே
குறை வந்த போது தன் உயிர் தந்தாரே
உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்தாரே
உலகினை நியாயம் தீர்க்க மீண்டும் வருபவரே