1.joothiyay aathiththan thoonritum neram

ஜோதியாய் ஆதித்தன் தோன்றிடும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.ஜோதியாய் ஆதித்தன் தோன்றிடும் நேரம்
விண்மீன்கள் தேய்ந்து பின் மாய்ந்துவிடும்
அவ்விதம் நம் வேலை ஒய்ந்திடும் நாளில்
கிரியைகள் மட்டும் நினைக்கப்படும்.
கிரியைகள் மட்டும், கிரியைகள் மட்டும்,
கிரியைகள் மட்டும் நினைக்கப்படும்;
புவியில் நம் வேலை ஒய்திடும் நாளில்
கிரியைகள் மட்டும் நினைக்கப்படும்.
2.மற்றோர் நம் ஸ்தானம் வகித்திடும் நாளில்
நினைவுகூர்வரோ நம் நாமமும்?
பிறர் நாம் நடும் பயிர் கொய்யும் போழ்தில்
கிரியைகள் மட்டும் நினைக்கப்படும்.
3.ஜீவிய நாட்களில் கூறிய உண்மை
பூவில் விதைத்திட்ட விதைகளும்
நம்மை மறந்திடும் நாள் வருங்காலை
கிரியைகள் மட்டும் நினைக்கப்படும்
4.மீட்பர் தம் சம்பத்தைச் சேர்க்கும் அந்நாளில்
ஜெய கிரீடங்கள் சூடுகையில்
சோர்வுற்ற உத்தம சீஷர்க்கு விண்ணில்
கிரியைகள் மட்டும் நினைக்கப்படும்.
ஜோதியாய் ஆதித்தன் தோன்றிடும் பாடல் வரிகள், Jothiyaai Aathiththan Thontridum Lyrics