jeyame tharuval nam matha – Jeyamea Tharuvaal Nam Madha

ஜெயமே தருவாள் நம் மாதா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs and Roman Catholic Songs collection.

ஜெயமே தருவாள் நம் மாதா – Jeyamea Tharuvaal Nam Madha
ஜெயமே தருவாள் நம் மாதா
ஜெகமே போற்றிடும் இறைமாதா – 2
அருள் நிறைந்த அன்னை அவள்
அன்பினில் நாம் திளைப்போம் – 2
இறைவனின் சொந்த அன்னையையே
கனிவுடன் நமக்கென தந்துவிட்டார் – 2
அன்பு தாயை எந்த நாளுமே
உலகம் எங்கும் போற்றி பாடவே
கூடுவோம் இங்கு நன்றி கூறுவோம் இன்று – 2
வேண்டிய வரங்கள் கிடைத்திடவே
பரிந்துரைகள் பல செய்திடுவாள் – 2
இரக்கத்தின் அன்னை அவள்
நம் குறையெல்லாம் தீர்த்திடுவாள்
கூடுவோம் இங்கு நன்றி கூறுவோம் இன்று – 2