jeyame jeyame jeyame

ஜெயமே ஜெயமே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஜெயமே ஜெயமே ஜெயமே
ஜெயித்தவரால் நமக்கென்றும் ஜெயமே
இயேசு நாமத்தாலே என்றும் ஜெயமே
இனி தோல்வி நமக்கில்லை ஜெயமே
வெள்ளம்போல சத்துரு வந்தாலும்
ஆவியானவர் கொடி ஏற்றுவார்
தண்ணீர்கள் உடைந்து ஓடுவதுபோல்
சத்துருவை சிதறடிப்பார்
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
சிலுவையில் இயேசு வெற்றி சிறந்தார்
ஜீவனின் பெலனுமானார்
எதிர்ப்புகள் எத்தனை இருந்தாலும்
நாம் முன்னேற நம்மை நடத்துவார்
யுத்தத்தில் வல்லவர் பார்த்துக்கொள்வார்
ஜெயத்தை நமக்கு தருவார்