jeyam jeyam allaelooyaa jeyam jeyam

ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும்
யேசு நாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும்.
1 உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்
எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் நானிருப்பேன்.
2 பாவி பாவி பாவி பாவி பரலோகம் சேரவா
பிராணநாதர் பாதத்தண்டை தாவியே ஓடிவா.
3 பாவ சஞ்சலத்தை விட நாளை வரக் காணாதே
ரட்சகரே அழைக்கிறார் பாவியே ஓடிவா.
4 நானே வழி சத்தியம் நானே ஜீவன் என்றாரே
நாதன் கிறிஸ்துவண்டை பாவியே ஓடி வா.