Jeevanulla Devanai Seavippar

ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1. ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் யாருண்டோ?
ஜீவனை அவர்க்காயளிக்க இங்கு யாருண்டோ?
ஜீவனை இரட்சிப்பவன் இழந்து போவானே
ஜீவனை வெறுப்பவனோ பற்றிக்கொள்வானே – நம்மிலே
2. மனிதர் இன்றும் உலகில் வாழ்ந்து வருவதெவ்வாறு?
ஜீவாதிபதி இயேசு தம் ஜீவன் கொடுத்ததால்
திருச்சபையின் வளர்ச்சி ஓங்கச் செய்த தெவ்வாறு
பரிசுத்தரின் பரிவாரம் ஜீவன் விட்டதால் – நம்மிலே
3. சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ உயர்ந்ததெவ்வாறு
ராஜாவின் உள்ளத்தில் மாற்றம் வந்ததெவ்வாறு?
ஜீவனைப் பணயம் வைத்துத் தீக்குள் சென்றதால்
சிலையை வணங்கத் தயக்கமின்றி மறுத்து நின்றதால் – நம்மிலே
4. பரலோகத்தின் பாக்கியத்தைப் பெறுவோர் யாவரும்
உபத்திரவத்தின் குகைக்குள் நுழைந்து சென்று திரும்பணும்
உலகத்தையும் மேன்மையையும் உதறித் தள்ளணும்
சிலுவையை மட்டும் எடுத்து சுகித்திருக்கணும் – நம்மிலே
5. வெள்ளை அங்கி தரித்து நிற்கும் கூட்டம் யார் இவர்?
இரத்தத்தில் தம் அங்கிகளைத் தோய்த்து வெளுத்தவர்
ஜீவனை வெறுத்துச் சிலுவையை எடுத்து
வெற்றிக்கீதம் பாடும் கூட்டம் உலகில் உதிக்கட்டும் – நம்மிலே