jeeva thanneere

ஜீவ தண்ணீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஜீவ தண்ணீரே
என்னில் பாய்ந்து செல்லுமே
பொங்கி பொங்கி வாரும்
ஊற்றெடுத்து வாரும்
என்னில் வெளிப்படும்
கணுக்கால் அளவு அல்லவே
முழங்கால் அளவு அல்லவே
நீச்சல் ஆழத்தில் என்னை
இழுத்து செல்லுமே
சுயம் அது முற்றிலும் அகலவே
இகமதில் ஆசைகள் விலகவே
எழுப்புதல் எண்ணமே
என் ஏக்கமாய் மாற்றுமே
கண்கள் காணும் யாவுமே
காயம் நீங்கி பிழைக்கட்டும்
நான் செல்லுமிடமெல்லாம்
செழிப்பாய் மாற்றுமே