Jeeva Nathiye Enthan Ullathil Paaynthu Selluthume

ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
பாய்ந்து செல்லட்டுமே
1.மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்
என்னில் மறைந்து போகட்டுமே-2
2.உலர்ந்த எலும்புகளெல்லாம்
என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே
3.பெலவீனப் பகுதியெல்லாம்
என்னில் பெலமாக மாறட்டுமே
4.கனி கொடா மரங்களெல்லாம்
என்னில் கனிகள் கொடுக்கட்டுமே
5.ஆவியின் வரங்களினால்
என்னை அபிஷேகம் செய்திடுமே