Jeba Aaviyaal Lyrics

ஜெப ஆவியால்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஜெப ஆவியால் நிரப்புமையா
ஜெப சிந்தையை தாருமையா
ஜெபிக்கணுமே இன்னும் ஜெபிக்கணுமே
ஜெப ஆவியால் என்னை நிரப்பிடுமே
1. இந்தியா உம்மை அறிந்திடணும்
பாரதம் விடுதலை அடைந்திடணும்
பாவங்கள் எல்லாம் ஒழிந்திடணும்
சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திடணும்
ஜெபித்திடுவேன் இன்னும்
ஜெபித்திடுவேன்
உயிருள்ள நாளெல்லாம்
ஜெபித்திடுவேன்
2. சபைகளில் பரிசுத்தம் ஜொலித்திடணும்
ஆதி அன்புக்குள் வந்திடணும்
ஆத்தும பாரங்கள் பெருகிடணும்
இழந்திட்ட மகிமை திரும்பிடணும்
ஜெபித்திடுவேன் இன்னும்
ஜெபித்திடுவேன்
உயிருள்ள நாளெல்லாம்
ஜெபித்திடுவேன்
3. வாலிப சேனைகள் எழும்பிடணும்
இயேசுவே உமக்காய் வாழ்ந்திடணும்
ராஜா உம் ஊழியம் செய்திடணும்
ராஜ்ஜிய சுவிசேஷம் சொல்லிடணும்
ஜெபித்திடுவேன் இன்னும்
ஜெபித்திடுவேன்
உயிருள்ள நாளெல்லாம்
ஜெபித்திடுவேன்
4. உம் சித்தம் செய்திட அர்ப்பணித்தேன்
கோதுமை மணியாக மடிந்திடுவேன்
என் உள்ளம் ஓய்வின்றி கதறுமையா
என் தேசம் உம்மை காணும் வரை
ஜெபித்திடுவேன் இன்னும்
ஜெபித்திடுவேன்
உயிருள்ள நாளெல்லாம்
ஜெபித்திடுவேன்