iyesuve eenintha pato

இயேசுவே ஏனிந்த பாடோ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவே ஏனிந்த பாடோ
எந்தனை மீட்டிடவோ
உந்தன் முகந்தனைப் பார்க்கையிலே
எந்தன் கண்களும் கலங்கிடுதே
கோர சிலுவை சுமந்தவராய்
குருதி சிந்தி நடை தளர்ந்து
கொல்கதா மலையின் மேலேறி
கொடுமைகள் யாவும் சகித்தாரே
கன்னத்தில் அறையும் சேவகனை
கனிவுடன் நோக்கும் கருணைக் கண்கள்
பாதமே தீராப் பாதையன்றோ
கஷ்டங்கள் யாவும் சகித்தாரே
ஆயிரம் பேர்களில் சிறந்தவராம்
அழகுற்றாரே சிலுவையிலே
தொங்கியே தந்தார் ஜீவனையே
நித்திய ஜீவன் தந்தவரே